ராமநாதபுரம்: நீதிபதி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர்!

ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெனிதா, தவறான புரிதலில் ,ராமநாதபுரம் வணிக குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஜெனிபா ராணியை நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் ஒருமையில் பேசி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.


மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1. இங்கு விசாரணைக்கான ஆவணங்களை எடுத்துச் சென்ற ராமநாதபுரம் வணிக குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஜெனிபா ராணியை, மாவட்ட நீதித்துறை நீதிபதி ஜெனிதா அவதூறாக பேசியதோடு,


உதவி ஆய்வாளர் ஜெனிபா ராணியை ஊழியர்கள் மற்றும் விசாரணை கைதிகள் முன்னிலையில் நீதிமன்ற ஊழியர்களை வைத்து நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே அனுப்பி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது